சிவனொளிபாதமலைக்கு கேபிள் கார் வசதி அறிமுகம்
இரத்தினபுரி - நுவரெலியா மாவட்ட எல்லையில் அமைந்துள்ள சிவனொளிபாத மலைக்கு கேபிள் கார் (Cable Car) வசதியை அறிமுகப்படுத்துவது தொடர்பாக அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியுள்ளது.
இது தொடர்பில் நேற்று (2026.04.28) ஜனாதிபதி செயலகத்தில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதியைக் கருத்திற்கொண்டும், சுற்றுலாத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்தும் ஒரு பகுதியாகவும் இந்தத் திட்டம் அறிமுகப்படுப்பட்டுள்ளது.
சாத்திய வள ஆய்வுகளை மேற்கொள்ளவும் அனுமதி
மேலும், சிவனொளிபாத மலைக்கு மேலதிகமாக நுவரெலியா - கிகிளியமான மலையுச்சி மற்றும் பதுளை - எல்ல பிரதேசங்களிலும் கேபிள் கார் வசதியை ஏற்படுத்துவதற்கான சாத்தியம் குறித்தும் நேற்றைய கலந்துரையாடலின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் சாத்திய வள ஆய்வுகளை மேற்கொள்ளவும் அனுமதி பெற்றுக் கொள்வதற்கான நிறுவனங்களிடம் அதற்கான சமர்ப்பணங்களை மேற்கொள்ளவும் இந்தக் கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |