அஜித் நிவார்ட் கப்ராலின் வெளிநாட்டு பயணத்தடை : நீதிமன்றம் விடுத்த உத்தரவு
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை மார்ச் 2ஆம் திகதி வரை தற்காலிகமாக நீக்கி கோட்டை நீதவான் திலின கமகே இன்று (19) உத்தரவிட்டார்.
அஜித் நிவார்ட் கப்ரால் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவிருப்பதால் அவருக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை நீக்குமாறு சட்டத்தரணி திலின வீரசிங்கவின் கோரிக்கையை நீதவான் திலின கமகே பிரேரணை மூலம் ஏற்றுக்கொண்டார்.
அஜித் நிவார்ட் கப்ராலுக்கு
2014ஆம் ஆண்டு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் மத்திய வங்கியின் நிதிச் சபை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக தினியாவல பாலித தேரர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அங்கு, அஜித் நிவார்ட் கப்ரால், நிதிச் சபையின் அனுமதியுடன் மட்டுமே மூன்றாம் தரப்பினருக்கு 6.5 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை செலுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |