இந்தியா - கனடா மோதல்! மீண்டும் சர்ச்சைக்குரிய விமர்சனம்
கனடா தூதர்கள் மீதான இந்திய அரசின் நடவடிக்கை இரு நாடுகளிலும் உள்ள லட்சக் கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கையைக் கடினமாக்குகிறது என கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருக்கும் 41 தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்ட நிலையில், ட்ரூடோ இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இராஜதந்திர கொள்கை
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இந்தியாவிலும் கனடாவிலும் உள்ள லட்சக் கணக்கான மக்களின் வாழ்க்கையை நம்பமுடியாத அளவிற்கு இந்திய அரசு கடினமாக்குகிறது.
அவர்கள் இராஜதந்திரத்தின் அடிப்படைக் கொள்கையை மீறி அதைச் செய்கிறார்கள்.
இந்தியாவை தங்களுடைய பூர்வீகமாகக் கொண்ட லட்சக் கணக்கான கனடா மக்களின் நல்வாழ்வு மற்றும் மகிழ்ச்சியைக் கருத்தில் கொண்டே நான் இதைக் கூறுகிறேன்" என்றார்.
இந்தியா கனடா இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் இந்தியாவை விமர்சிக்கும் வகையில் கூறிய கருத்துகள் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.