யாழில் காவல் நிலையம் ஒன்றின் பின்காணிக்குள் இருந்து மீட்கப்பட்ட கஞ்சா
Sri Lanka Police
Jaffna
Drugs
By Theepan
யாழ்ப்பாணத்தில் காவல் நிலையம் ஒன்றின் பிற்பகுதியில் உள்ள வெற்றுக்காணிக்குள் இருந்து 10 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
கொடிகாமம் காவல் நிலையத்தின் பின்புறமாக உள்ள வெற்றுக்காணிக்குள் சந்தேகத்திற்கு இடமான முறையில் பொதி ஒன்று காணப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்ததை அடுத்து , அங்கு விரைந்த காவல்துறையினர் பொதியை மீட்டு சோதனை செய்தனர்.
பத்து கிலோ கஞ்சா மீட்பு
அதற்குள் 10 கிலோ கேரளா கஞ்சா காணப்பட்டுள்ளது. அதனை மீட்டு காவல்நிலையம் எடுத்து சென்ற காவல்துறையினர்,அது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
2 நாட்கள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி