கிடுகிடுவென உயரும் விலைகள்...! சாதாரண வீட்டை கட்ட 34.4 மில்லியன்
இலங்கையில் கட்டிட நிர்மாணப் பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தற்போதைய விலை நிலவரப்படி, 2,000 சதுர அடி கொண்ட (3 படுக்கையறைகள்) ஒரு சாதாரண வீட்டை நிர்மாணிப்பதற்கு சுமார் 34.9 மில்லியன் ரூபா செலவாகும் என தெரிவிக்கப்படுகின்றது
குறித்த விடயத்தை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் டாரிங்டன் பால் தெரிவித்துள்ளார்.
மில்லியன் ரூபா
அவர் கருத்துத் தெரிவிக்கையில், இரும்பு விலையை 25,000 - 30,000 ரூபாவால் அதிகரிப்பது ஒரு 'மாஃபியா' போன்றது எனச் சாடியுள்ளார்.

மூன்று கியூப் மணலின் விலை தற்போது 150,000 ரூபாவைத் தாண்டியுள்ளது.
தற்போதைய விலை நிலவரப்படி, 2,000 சதுர அடி கொண்ட (3 படுக்கையறைகள்) ஒரு சாதாரண வீட்டை நிர்மாணிப்பதற்கு சுமார் 34.9 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஓடுகள் மற்றும் அலுமினியச் சந்தையில் நிலவும் ஒரு சில நிறுவனங்களின் ஆதிக்கம் விலைகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலையை உருவாக்கியுள்ளதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சிமெந்தின் விலை
அரசாங்கம் இந்த ஆண்டு 630 பில்லியன் ரூபா பெறுமதியான கட்டுமான ஒப்பந்தங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், மூலப்பொருட்களின் இந்த அதீத விலையேற்றம் அரச திட்டங்களையும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு மூடை சிமெந்தின் விலை 2,100 ரூபாவைக் கடந்துள்ளதுடன், சந்தையில் அதன் தெரிவுகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு கியூப் ஆற்று மணலின் விலை மார்ச் மாத தொடக்கத்துடன் ஒப்பிடுகையில் 20 வீதம் அதிகரித்துள்ளது.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |