அமைச்சுப் பதவி கிடைத்த பின் கடற்றொழிலாளர்களை கண்டுக்கொள்ளாத சந்திரசேகர்! முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு
மக்களோடு மக்களாக கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு போராடி வந்த தற்போதைய கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அமைச்சுப் பதவி கிடைத்த பின் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை பாராமுகமாக கடந்து செல்வதாக யாழ்ப்பாணம் மாவட்ட கடல் தொழிலாளர் சங்கங்கள் இன்று குற்றம் சாட்டியுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர்களின் ஊடக சந்திப்பு இன்று தந்தை செல்வா மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது கருத்து தெரிவிக்கும் போது அன்னலிங்கம் அன்னராசா இவ்வாறு குற்றம் சுமத்தினர்.
ட்ரம்ப் நிர்வாகத்துக்கு அதிர்ச்சி: பென்டகனின் முக்கிய கூட்டத்தில் இருந்து வெளியேறிய முக்கிய உறுப்பினர்கள்
சீனாவின் அட்டைப் பண்ணை
அத்துடன் கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த சீனாவின் அட்டைப் பண்ணைகள் தற்போதும் கிராந்தி பூநகரி பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதற்கு அமைச்சர் இந்த வித தீர்வையும் பெற்று தரவில்லை என்றும் தெரிவித்தார்.

அத்துடன் தென் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு ஒரு சட்டமும் வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு ஒரு சட்டமும் பார்க்கப்படுவதாகவும் கடற்றொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பில் பல முறைப்பாடுகளை தெரிவித்தும் தீர்வு கிடைக்கவில்லை.
இவ்வாறு தீர்வு கிடைக்காத பட்சத்தில் தாம் பாரிய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் இதன் போது அன்னலிங்கம் அன்னராசா தெவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |