சன்ன ஜயசுமனவை உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற்ற நீதி மன்றம் உத்தரவு
Sri Lanka
Channa Jayasumana
By Beulah
அரசாங்க இல்லத்தில் பலவந்தமாக தங்கியிருந்ததாக கூறப்படும், முன்னாள் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமனவை வெளியேற்றுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (28) உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவு

அமைச்சர் பதவியை விட்டு வெளியேறிய பின்னரும் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இருந்து குற்றம் சாட்டப்பட்டவரை வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்குமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீதவான் நீதிமன்றில் கோரியிருந்தார்.
நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட வழக்கு தொடர்பான உண்மைகளை உறுதி செய்த நீதிமன்றம் அமைச்சரை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.