எதிர்க்கட்சி மீது குற்றச்சாட்டு! நிராகரித்தார் லக்ஸ்மன் கிரியெல்ல
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்திற்கு வெளியே கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக வெளியான தகவலை எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல நிராகரித்துள்ளார்.
சபாநாயகர் அலுவலகத்திலும் செயலாளர் அலுவலகத்திலும் கொரோனா தொற்றுக்கள் இருந்தன. இந்தநிலையில் மே 18 முதல் நாடாளுமன்ற அமர்வுகள் நடத்தப்படாவிட்டால் இந்த தொற்று ஏற்பட்டிருக்காது.
துறைமுக நகர பொருளாதார ஆணைய யோசனைக்கு ஒப்புதலைப் பெறவே அரசாங்கம் இந்த காலத்தில் சபையை கூட்டியது. இதன்போது நாடாளுமன்ற பொதுச்செயலாளரை சந்தித்து அமர்வுகள் ஒத்திவைக்க சஜித் பிரேமதாஸ முயன்றபோதும் அது நிராகரிக்கப்பட்டதாக லக்ஸ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்துக்குள் இருந்து தொற்றுக்கு உள்ளானாரா? என்பது தொடர்பில் மருத்துப் பகுப்பாய்வு எதுவும் நடத்தப்படவில்லை என்று நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் அலுவலகத்திலும், பொதுச்செயலாளர் அலுவலகத்திலும் ஒரு மாதத்திற்கு முன்னர் தொற்றுக்கள் கண்டறியப்பட்டன.
எனவே சஜித் பிரேமதாஸ நோய்த்தொற்று ஏற்படுவதற்கு இந்த அலுவலங்களில் இருந்து
தொடர்பு இருந்திருக்க முடியாது.
அத்துடன் பணியாளர்கள் வீடுகளில் இருந்தே பணியாற்றுவதன் காரணமாக நாடாளுமன்ற
வளாகத்திற்குள் கொரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் நாடாளுமன்ற
படைக்கள சேவிதர் குறிப்பிட்டுள்ளார்.