இன விகிதாசாரத்தை குறைக்க நடவடிக்கை - ஸ்ரீலங்கா அரசாங்கம் மீது கடுமையான குற்றச்சாட்டு
வடக்கு கிழக்கு மக்களின் இன விகிதாசாரத்தை குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ஸ்ரீலங்கா அரசாங்கம், 13 ஆம் திருத்தச் சட்டத்தை மீறும் வகையில் செயற்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் நேற்று உரை நிகழ்த்திய அவர், பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு அஞ்சி வெளி நாடுகளில் அகதிகளாக வாழும் மக்கள் தாயகம் திரும்பாமல் இருப்பதே யாழ். தேர்தல் தொகுதியில் வாக்காளர் எண்ணிக்கை குறைந்தமைக்கு காரணம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட சார்ள்ஸ் நிர்மலநாதன், முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில் தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதன் மூலம், எதிர்காலத்தில் அங்கும் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என குற்றம் சுமத்தியுள்ளார்.