வரலாறு காணாத வீழ்ச்சி காணும் சீனா
சீனாவின் ஏற்றுமதி முன்னெப்போதும் இல்லாத வகையில் வெகுவாக சரிவடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த ஏழு ஆண்டுகள் இல்லாத அளவில் சீனாவின் ஏற்றுமதி சரிவதானிந்துள்ளது, அமெரிக்காவுடனான பதட்டம் மற்றும் உலக பொருளாதார தடுமாற்றத்திற்கு பிறகான மீட்சி ஆகியவற்றால் இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
உள்நாட்டு உற்பத்தி
கடந்த ஆண்டுகளில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கும் ஏற்றுமதியின் மதிப்பு சரிந்திருப்பது நாடு பணவாட்டத்தின் சூழலில் சிக்கியுள்ளதற்கான அறிகுறியாக கருதப்படுகிறது.
மேலும், அமெரிக்காவுடனான வர்த்தகம் கடந்த 4 ஆண்டுகளில் முதன்முறையாக சரிந்துள்ள அதே நேரத்தில் ரஷ்யாவுடன் வர்த்தகம், உக்ரைன் உடனான போர்ப் பதட்டத்தால் உருவான பன்னாட்டு அழுத்தத்தால் இதுவரை இல்லாதளவுக்கு அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக அடுத்தடுத்த மாதங்களில் இன்னும் பல பிரச்னைகள் வரக்கூடும் எனவும் எச்சரிக்கப்படுகிறது.
ஏற்றுமதி சரிந்துள்ளது
மேலும், வெளிப்புற மாற்றங்களால் பன்னாட்டு வணிகத்தில் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் அதற்காக கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் சீனாவின் சுங்கத் துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் முதல் சரிந்திருந்த ஏற்றுமதி நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிகரித்தபோதும் 2022 டிசம்பர் மாதத்தின் மிகக் குறைந்த தரவுகளோடு ஒப்பிடும்போது குறைந்தளவாக காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
2023-ல் அதற்கு முந்தைய ஆண்டைவிட ஒட்டுமொத்தமாக 4.6 சதவீதமளவுக்கு ஏற்றுமதி சரிந்துள்ளது, 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்படுகிற மிகப்பெரிய சரிவு இது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |