சீனாவில் இருந்து வருகிறது 96,000 மெட்ரிக் தொன் பசளை
sri lanka
import
pohora
By Vanan
நாட்டுக்கு தேவையான 96,000 மெட்ரிக் தொன் சேதன பசளை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக சேதன களை உற்பத்தி அபிவிருத்தி மற்றும் விநியோக இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் மகேஸ் கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இதன்கீழ் 10% நைட்ரிஜன் உள்ளடங்கிய சேதன பசளை, நைட்ரிஜன் 15% மற்றும் அமோனிய அமிலம் 80% அடங்கிய சேதன பசளை 3000 மெட்ரிக் தொன் இறக்குமதி செய்யவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சீனாவில் இருந்து இந்த சேதன பசளை இறக்குமதி செய்யப்படுவதாகவும் அடுத்த மாதம் 25ஆம் திகதி நாட்டை வந்தடையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சேதன பசளை எதிர்வரும் பெரும்போக நெல் செய்கையாளர்களுக்கு மாத்திரம் விநியோகிக்கப்படும் என்றும் ஏனைய சேதன பசளைகளை இறக்குமதி செய்ய 30 நிறுவனங்கள் கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும் மகேஸ் கம்மன்பில தெரிவித்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி