இலங்கையில் விவசாயத்துறையில் முதலிட சீனா ஆர்வம்
Sri Lanka
China
Ministry of Agriculture
K.D. Lalkantha
By Sumithiran
இலங்கையில் பால் பண்ணை மற்றும் ஏற்றுமதி சார்ந்த விவசாயத்துறைகளில் முதலீடுகளைச் செய்வதற்கான திட்டத்தை, சீனா முன்வைத்துள்ளது. சீன வர்த்தக சபை பிரதிநிதிகள், பத்தரமுல்லையில் விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்தாவுடன் நடத்திய சந்திப்பின் போது, இந்த திட்டத்தை சமர்ப்பித்துள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்திற்கும் இந்த திட்ட முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பெரியளவில் பால் பண்ணைகளை உருவாக்குதல்
பயன்படுத்தப்படாத அரசு நிலங்களைப் பயன்படுத்தி – பெரியளவிலான பால் பண்ணைகளை உருவாக்குதல் மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் நோக்கில் மரக்கறிகள் மற்றும் பழங்களை பயிரிடுவதற்கான திட்டங்களில் முதலீடு செய்ய சீனா திட்டமிட்டுள்ளது.

காணி ஆணையர் நாயகம் திணைக்களம், நில சீர்திருத்த ஆணைக்குழு மற்றும் இலங்கை மகாவலி அதிகாரசபையின் கீழ் உள்ள நிலங்களில் இந்த முதலீடுகளை மேற்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி