மிரட்ட வைக்கும் சீன கப்பலால் இந்தியாவுக்கு ஏற்பட போகும் பாதிப்புக்கள்..! வெளியாகிய அதிர்ச்சி தகவல்
யுவான் வாங் 5
சீனாவின் கண்காணிப்பு கப்பல்களுக்குள் மிக பிரமாண்டமான 'யுவான் வாங் 5' கப்பல் நேற்று சிறிலங்காவின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
222 மீட்டர் நீளமும், 26 மீட்டர் அகலமும் உடைய இந்த கண்காணிப்பு கப்பலில் அதி நவீன விண்வெளி ஆய்வு கருவிகள் உள்ளதாகவும் விண்ணில் பறக்கும் செயற்கை கோள்களைக்கூட இந்த கண்காணிப்பு கப்பலால் ஆய்வு செய்ய முடியும் என்பதால் ஆரம்பத்தில் இருந்தே கப்பலின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது.
குறித்த கப்பல் 750 கி.மீ. சுற்றளவில் இருக்கும் அத்தனை விடயங்களையும் துல்லியமாக ஆய்வு செய்யும் திறன் கொண்டிருப்பதாகவும் தமிழகத்தில் இருந்து சிறிலங்காவின் ஹம்பாந்தோட்டை துறைமுகம் 150 கி.மீ தொலைவில் இருப்பதால் கப்பலின் வருகை தொடர்பில் மீள் பரிசீலனை செய்யுமாறு இந்தியா எச்சரிக்கை விடுத்து.
சீனாவின் விடாப்பிடியும் - இந்திய எதிர்ப்பும்
இருப்பினும், சீனாவின் விடாப்பிடி காரணமாக அறிவியல் ஆய்வுகளில் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனையின் பேரிலும், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு சீனா குத்தகைக்கு எடுத்திருக்கின்றமையால் அந்த துறைமுகத்துக்குத்தான் வரப்போவதாக சீனா இராணுவம் அறிவித்தமையாலும் இலங்கை அரசு 'யுவான் வாங் 5' கப்பலுக்கு அனுமதியளித்து.
இதன்படி நேற்று காலை 8.20 மணிக்கு யுவான் வாங்-5 உளவு கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது. நேற்று முதல் 22ம் திகதி வரை 7 நாட்களுக்கு கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரம் இடப்பட்டு நிலை கொண்டிருக்கும் என தெரிவிக்கபடுகின்றது.
எரிபொருள் நிரப்புவதற்கு என காரணம் கூறியிருப்பினும், இந்த கண்காணிப்பு கப்பல் இலங்கை துறைமுகத்துக்கு வந்தால் தென் இந்திய பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படும் என்று இந்திய இராணுவம் தெரிவித்திருந்த நிலையில் அமெரிக்காவும் இதே கருத்தை வெளியிட்டது.
இதற்கமைய இலங்கை - சீனா இராணுவ அதிகாரிகளுக்கிடையே பேச்சுவார்த்தை இடம்பெற்றது, இருப்பினும் குறித்த பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் மற்றும் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பில் இரு நாடுகளும் எதுவித கருத்தும் தெரிவிக்காமையினால் குறித்த கண்காணிப்பு கப்பலின் நடவடிக்கைகள் தொடர்ந்து மர்மமாகவே இருக்கின்றன.
அதனால் இந்த கப்பலால் தென் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதை மறுக்க முடியாது என்று இராணுவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கப்பலின் வரவேற்பும் - அமெரிக்க இந்திய தரப்பின் அச்சமும்
#YuanWang5 in Hambantota Port
— BRISL (@BRI_SL) August 16, 2022
? Thilina Kaluthotage pic.twitter.com/omX82fRo6c
கப்பலின் வருகையை தவிர்க்க முடியாமல் உள்ளது என சிறிலங்கா அரசு தெரிவித்திருந்தாலும் இன்று கப்பலுக்கு சீன தூதரகமும், சிறிலங்கா அதிகாரிகளும் உற்சாக வரவேற்பு கொடுத்தமை அமெரிக்க இந்திய தரப்பின் அச்சத்தை மேலும் வலுவாக்கியுள்ளது.
இதன் காரணமாக கப்பல் துறைமுகத்தில் இருக்கும் 7 நாட்களும் அந்த கப்பலின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனிக்க இந்தியா ஏற்பாடு செய்திருப்பதாக இராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இந்திய கண்காணிப்பின் ஒரு பகுதியாகவே நேற்று இலங்கைக்கு இந்திய அரசு வழங்கிய கடல் சார் உளவு விமானமும் காணப்படுகின்றது என எதிர்வு கூறப்படுகிறன்றது.
சீனாவிடம் ராணுவம் மற்றும் விண்வெளி ஆய்வுக்காக 7 உளவு கப்பல்கள் உள்ளன என்றும் அதில் யுவான் வாங்-5 என்ற கண்காணிப்பு கப்பலே அதி செயல்திறன் வாய்ந்த கப்பல் எனவும் இதன் காரணமாக தென் இந்தியாவிற்கு பாரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் எனவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.
அணுமின் நிலையம் முதல் ஸ்ரீ ஹரிகோட்டா வரை பாதுகாப்பு அச்சம்
அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்ட குறித்த கப்பல் மூலம் தென் இந்தியாவில் உள்ள 6 கடற்படை தளங்களை இந்த உளவு கப்பலால் படம் பிடிக்க முடியும் எனவும் அங்கு என்ன வசதிகள் உள்ளன என்பதையும் தெரிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தமிழகத்தில் கல்பாக்கம், கூடங்குளம் ஆகிய 2 இடத்திலும் சக்திவாய்ந்த அணுமின் நிலையங்கள் உள்ளன. இந்த அணுமின் நிலையங்களையும் உளவு கப்பலால் பார்க்க முடியும் எனவும் சென்னைக்கு அருகே இருக்கும் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் பணிகளையும் அந்த கப்பலால் ஆய்வு செய்ய முடியும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்த அச்சுறுத்தல்கள் தவிர விசாகப்பட்டினம் மற்றும் கொச்சியில் உள்ள கடற்படை தளங்களையும் கப்பல் துல்லியமாக தெரிந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் இந்த உளவு தகவல்கள் உடனுக்குடன் சீன இராணுவத்துக்கு அனுப்பப்படும் அபாயம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
புவிசார் அரசியல் போட்டியில் இலங்கை
சுமார் 2 ஆயிரம் பேர் பணிபுரிந்து வரும் யுவான் வாங்-5 கண்காணிப்பு கப்பல் துறைமுகத்தில் பணியாளர் மாற்றம் செய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்வு கூறப்படுகின்றது, இதனால் அவ்வாறான நடவடிக்கைகளை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வைத்து மேற்கொள்ளக்கூடாது என்று இலங்கை நிபந்தனை விதித்திருக்கிறது.
எவ்வாறாயினும் புவிசார் அரசியல் போட்டியில் இலங்கை அரசிற்கு புதிய பிரச்சனை தோற்றம் பெற்றுள்ளது என்பதை மறுக்க முடியாது என அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
சீனக் கப்பல் இலங்கையில்! இனி இந்தியா தொடர்பாக சீனாவின் நகர்வு ? (காணொளி)
தொடர்புடைய செய்தி
சீன கப்பல் தொடர்பான எந்த சவாலையும் இந்தியா சமாளிக்கும் -கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் தகவல் |
சீனக்கப்பலின் வருகைக்கு பதிலடி..! இலங்கை வந்தடைந்தது இந்தியாவின் உளவு விமானம் |
தேவையில்லாமல் இலங்கை விவகாரத்தில் தலையிட வேண்டாம்..! இந்தியாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த சீனா |
கொதிநிலையில் சீன கப்பல் விவகாரம்..! சிறிலங்காவுக்கு இந்தியா வழங்கும் உளவு விமானம் |