சீனாவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி! மூன்று செய்மதிகளால் நிலைகுலைந்த யுவான் வாங்..!
இலங்கையில் நிறுத்தப்பட்ட சீன கண்காணிப்புக் கப்பலை மூன்று செய்மதிகள் மூலம் இந்தியா கண்காணித்த நிலையில், அக்கப்பலின் சமிக்ஞை கட்டமைப்புக்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்திருந்த யுவான் வாங் - 5 என்ற சீனாவின் அதி நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய கண்காணிப்புக் கப்பல் நேற்று துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.
யுவான் வாங் - 5 கப்பல் இலங்கைக்கு வந்த பின்னர் இந்தியா மூன்று செய்மதிகள் மூலம் கப்பலின் செயற்பாடுகள் தொடர்பாக விரிவான கண்காணிப்புகளை மேற்கொண்டுள்ளது.
கப்பலில் இருந்து செய்மதிகளை கண்காணிக்கும் போது அதன் சமிக்ஞை கட்டமைப்புக்கு இந்திய செய்மதிகள் மூலம் சில தடைகள் ஏற்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.
செய்மதிகள் ஊடாக சீனக் கப்பல் கண்காணிப்பு
இதனடிப்படையில், இந்தியா விண்ணில் நிலை நிறுத்தியுள்ள GSAT-7, EMISAT மற்றும் RISA ஆகிய செய்மதிகள் ஊடாக சீனக் கப்பல் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
யுவான் வாங் - 5 கப்பல் இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் பிரவேசித்த சந்தர்ப்பத்தில் இருந்து அதன் செயற்பாடுகளை இந்தச் செய்மதிகள் மூலம் கடுமையான கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டதாக தெரியவருகிறது.
சீனாவின் யுவான் வாங் - 5 கப்பல் கடந்த 16 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்ததுடன், நேற்றைய தினம் வரை அங்கு நங்கூரமிடப்பட்டிருந்தது.
சீனாவின் இந்தக் கப்பல் இலங்கைக்கு வருவது தொடர்பில் இந்தியா, அமெரிக்க ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்புகளை வெளியிட்டிருந்தன.
இந்த எதிர்ப்புகளை மீறி ‘யுவான் வாங் - 5’ என்ற கண்காணிப்புக் கப்பல், ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழையவும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்து நிற்கவும் இலங்கை அரசாங்கம் அனுமதி அளித்திருந்த நிலையில், அக்கப்பல் வருகை தந்து நேற்று புறப்பட்டுச் சென்றுள்ளது.
சூடுபிடிக்கும் சீனக் கப்பல் விவகாரம்..! சீனா இலங்கைக்கு வழங்கியுள்ள உறுதிமொழி |
இலங்கைக்கு இராஜதந்திர அழுத்தம்
‘யுவான் வாங் 5’ கப்பலின் இலங்கை வருகை தொடர்பில் இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளிடமிருந்து, கடும் இராஜதந்திர அழுத்தத்தை, கடந்த தினங்களில் இலங்கை சந்தித்திருந்தது.
இந்தியாவின் இராணுவக் கப்பல் இலங்கைக்கு வருகிறது. அமெரிக்காவின் இராணுவக் கப்பல் இலங்கைக்கு வருகிறது. இவ்வளவு ஏன், சில நாட்களுக்கு முன்பே சீனாவில் தயாரிக்கப்பட்ட பாகிஸ்தானின் இராணுவக் கப்பலான ‘தைமூர்’ இலங்கைக்கு வந்திருந்தது.
இந்த நிலையில், சீனாவின் ‘யுவான் வாங் - 5’ கப்பலின் இலங்கை வருகை மட்டும், ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்ற கேள்வி சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியிருந்தது.
சாதாரண இராணுவக் கப்பலைப் போன்றதல்ல ‘யுவான் வாங் - 5’ ஆராய்ச்சிக் கப்பல். ‘ஆராய்ச்சிக் கப்பல்’ என்ற பதத்தால், ‘யுவான் வாங் - 5’ கப்பலை விளிக்கப் பயன்பட்டாலும், ஏனைய நாடுகளைப் பொறுத்தவரையில், அது ‘ஒற்றறியும் கப்பலாகவே’ கருதப்படுகிறது.
ஆனால், இந்தியா இதனை ஒற்றறியும் கப்பலாகவே பார்ப்பதோடு, இலங்கைக்கான இதன் வருகையை, தனது தேசிய பாதுகாப்புக்கு எதிரான பெரும் சவாலாகவும் கணித்திருந்தது.
சீனக் கப்பல் விவகாரம் - இந்தியா, அமெரிக்காவுக்கு காட்டமான செய்தி |
யுவான் வாங் - 5
சீனாவில் தயாரிக்கப்பட்ட ‘யுவான் வாங் - 5’ கப்பல், 2007இல் இயங்கத் தொடங்கியது. கடல்கடந்த வான்வெளி கண்காணிப்புக்கான அதிநவீன கண்காணிப்புத் தொழில்நுட்பத்தை கொண்டுள்ள இந்தக்கப்பல், குறைந்தது 222 மீற்றர் நீளமும் 25.2 மீற்றர் அகலமும் கொண்டதாகவும், விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பில் ஈடுபடுவதற்கான அனைத்து நவீன வசதிகளையும் கொண்டமைந்து உள்ளதாகக் கூறப்படுகிறது.
‘யுவான் வாங் - 5’ என்பது, சீனாவின் ‘யுவான் வாங்’ தொடரின் மூன்றாம் தலைமுறை விண்வெளி கண்காணிப்புக் கப்பலாகும். விண்வெளி மற்றும் செயற்கை கோள் கண்காணிப்பு தொழில்நுட்பத்தை கொண்டமைக்கப்பட்டுள்ள யுவான் வாங் - 5 கண்காணப்பு கப்பலின் வான் வழி 750 கிலோமீற்றருக்கு அதிகமாக உள்ளமையினால், தென்னிந்தியாவின் கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் போன்ற இந்திய எல்லைக்குள் காணப்படுகின்ற அணு ஆராய்ச்சி மையங்களை மறைமுகமாக இந்தக் கப்பலினால் கண்காணிக்க முடியும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்தக் கப்பலால் கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா ஆகிய பகுதிகளிலுள்ள துறைமுகங்களையும் கண்காணிக்க முடியும் என கூறப்பட்டது.
தென்னிந்தியாவிலுள்ள 6 துறைமுகங்கள் சீனாவின் அவதானத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், தென்னிந்தியாவிற்கு அண்மித்துள்ள மிக முக்கிய இரகசிய இடங்கள் தொடர்பிலான தகவல்களையும் இந்தக் கப்பலினால் திரட்டிக் கொள்ள முடியும் என இந்திய ஊடகங்கள் தெரிவித்திருந்தது.
இந்த நிலையிலேயே யுவான் வாங் - 5 கப்பல் இலங்கைக்கு வந்த பின் இந்தியா மூன்று செய்மதிகள் மூலம் கப்பலின் செயற்பாடுகள் தொடர்பாக விரிவான கண்காணிப்புகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொதிநிலைக்குள்ளாகிய சீனக் கப்பல் விவகாரம்..! வெளியேறியதன் பின்னணியில் அமெரிக்க - இந்திய எதிர்ப்பு |
சிறிலங்காவில் பூதாகரமாக வெடித்த விவகாரம்..! நாட்டைவிட்டு வெளியேறியது சீன கப்பல் |
YOU MAY LIKE THIS