விடாப்பிடியாக சிறிலங்கா வந்த சீனக் கப்பல்! காய்களை நகர்த்திய மகிந்த - அம்பலமான தகவல்
சீன உளவுக் கப்பலான "யுவான் வாங் 5" இன் சிறிலங்கா வருகைக்கு பின்னால் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவினுடைய காய் நகர்தல்களே இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தக் கப்பலின் வருகைக்கு இந்தியா கடும் அழுத்தங்களை பிரயோகித்து தடையேற்படுத்த முயற்சித்த போதும், மகிந்த ராஜபக்சவின் உத்தரவின் பேரில் 2 மணித்தியாலங்களுக்குள் கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீன கப்பலின் பின்னணியில் மகிந்த, இந்தியாவிற்கு ஆதரவாக களமிறங்கும் அமெரிக்கா, நாடு திரும்பும் கோட்டாபயவுக்கான ஏற்பாடுகள் ஆரம்பம் என எமது தளத்தில் முக்கியமான செய்திகளை பலவற்றை இன்று பிரசுரித்திருந்தோம்.
அவற்றுள் சில முக்கிய செய்திகளை நீங்கள் தவறவிட்டு இருக்கலாம். எனவே நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம்.
சீன உளவுக்கப்பல் விவகாரம்..! அனுமதி வழங்கியதன் பின்னணியில் மகிந்த
சீன உளவுக் கப்பல் "யுவான் வாங் 5" நாட்டிற்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டதன் பின்னணியில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச செயற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீன கப்பலுக்கு அனுமதிக்குமாறு மகிந்த தெரிவித்து 2 மணித்தியாலங்களுக்குள் கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக தகவல் :- சீன உளவுக்கப்பல் விவகாரம்..! அனுமதி வழங்கியதன் பின்னணியில் மகிந்த: வெளிச்சத்துக்கு வந்த தகவல் |
சூடுபிடிக்கும் சீனக்கப்பல் விவகாரம்..! இந்தியாவிற்கு ஆதரவாக களமிறங்கும் அமெரிக்கா
சீனாவின் 'யுவான் வாங் 5' என்ற உளவு கப்பலை எதிர்கொள்ள இந்தியா தயார் நிலையில் உள்ளது என இந்தியாவின் முன்னாள் ராணுவ மேஜர் மதன்குமார் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை கண்காணிக்கவே சீனாவின் உளவு கப்பல் இலங்கையின் தென் பகுதியில் உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்துள்ளதாகவும் இந்த கப்பலை எதிர்கொள்ள இந்தியாவும் முழு தகுதியுடன் உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலதிக தகவல் :- சூடுபிடிக்கும் சீனக்கப்பல் விவகாரம்..! தயார் நிலையில் இந்தியா: ஆதரவாக களமிறங்கும் அமெரிக்கா |
மீண்டும் தாய்நாடு திரும்பும் கோட்டாபய - முகநூல் ஊடாக ஹாஸ் டாக் பரப்புரை
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பும் போது அவரை வரவேற்க பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறான நிலையில், சமூக வலைத்தளங்கள் ஊடாக கோட்டாபயவுக்கு ஆதரவானவர்கள் இதற்கான ஏற்பாடுகளையும் பரப்புரைகளையும் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் :- மீண்டும் தாய்நாடு திரும்பும் கோட்டாபய - முகநூல் ஊடாக ஹாஸ் டாக் பரப்புரை; கசிந்த தகவல்! |
எரிபொருள் விநியோக இடைநிறுத்தம்! அமைச்சர் கஞ்சன வெளியிட்ட தகவல்
நாட்டில் சில ஏரிபொருள் நிலையங்களை இடை நிறுத்துவதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் முன்னேற்ற மதிப்பாய்வு இன்று (19) இடம்பெற்றது. இதன்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் :- எரிபொருள் விநியோக இடைநிறுத்தம்! அமைச்சர் கஞ்சன வெளியிட்ட தகவல்
|
சீனாவின் பெரும் திட்டம்! யுவான் வாங்கை அடுத்து ஜிபூட்டி - இந்தியாவுக்கு அதிர்வு
ஆபிரிக்காவில் அமைந்துள்ள குட்டி நாடான ஜிபூட்டியில் சீனா ஆதிக்கம் செலுத்துவது இந்தியாவுக்கு மற்றுமொரு அதிர்வை கொடுத்திருக்கிறது.
இந்தியப் பெருங்கடலிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தனது செல்வாக்கையும் ஆதிக்கத்தையும் நிலைநிறுத்துவதற்காக சீனா ஒரு மூலோபாய சுற்றிவளைப்பை செய்து வருகிறது.
மேலதிக தகவல் :- சீனாவின் பெரும் திட்டம்! யுவான் வாங்கை அடுத்து ஜிபூட்டி - இந்தியாவுக்கு அதிர்வு |
கோட்டாபய நாடு திரும்பும் திட்டம் குறித்து தெரியாது..! ரணில் வெளியிட்ட தகவல்
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச இலங்கை திரும்பும் திட்டங்கள் தனக்கு தெரியாது என்று அதிபர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
அதிபர் செயலகத்தில் வைத்து சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக தகவல் :- கோட்டாபய நாடு திரும்பும் திட்டம் குறித்து தெரியாது..! ரணில் வெளியிட்ட தகவல் |
போர்க்குற்றவாளி என குற்றம் சுமத்தப்பட்டுள்ள சவேந்திர சில்வா தொடர்பில் மீண்டும் பிரித்தானியாவுக்கு அழுத்தம்!
சிறிலங்கா இராணுவ தளபதி சவேந்திர சில்வா உட்பட்ட இனம்காணப்பட்ட யுத்த குற்றவாளிகளை, பிரித்தானிய அரசு தடைசெய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய வேல்ஸ் அரசாங்கம் (Government of Wales) மற்றும் வேல்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்டும் நோக்கில் முக்கிய இராஜதந்திர சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
மேலதிக தகவல் :- போர்க்குற்றவாளி என குற்றம் சுமத்தப்பட்டுள்ள சவேந்திர சில்வா தொடர்பில் மீண்டும் பிரித்தானியாவுக்கு அழுத்தம்!
|
அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்..!
இலங்கை மத்திய வங்கியின் இன்றைய ( ஓகஸ்ட் 19 ) நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 357 ரூபா 41 சதமாகவும், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 368 ரூபா 72 சதமாகவும் பதிவாகியுள்ளது.
மேலதிக தகவல் :- அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்..! மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்தல் |