காவல்துறையினரை தாக்கிய சீனப் பெண் கைது!
வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த சீனப் பெண் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தச் சென்ற காவல்துறை உத்தியோகத்தர் இருவரை தாக்கிய சீனப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதலை நடத்திய சீனப்பெண் இன்று (20) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பேருவளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பேருவளை மங்கள வீதியிலுள்ள வீடொன்றில் சீனப் பெண்ணொருவர் செல்லுபடியான வீசா இன்றி தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் விசாரணைகளை மேற்கொள்ள அங்கு சென்றுள்ளனர்.
தாக்குதல் சம்பவம்
அதன்போது, அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக அந்த சீனப் பெண் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
பேருவளை மங்கள மாவத்தையில் வசித்து வந்த 36 வயதுடைய சீனப் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இந்நிலையில், தாக்குதலுக்குள்ளான இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களும் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபரான சீனப் பெண்ணும் களுத்துறை நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளார்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பேருவளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |