அதிரடிப்படையின் தேடுதலில் கோடிக்கணக்கான பெறுமதி கொண்ட சிகரட் மீட்பு!
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகள் காவல்துறையின் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சம்பவம் களனி - கோணவல - கொஹொல்வில வீதியில் இடம்பெற்றுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட 2இலட்சத்து 64 ஆயிரத்து 200 சிகரட்டுக்கள் எனவும் சுமார் 2 கோடி ரூபா பெறுமதி எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் வத்தளை - ஹுணுப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைவாக களனி - கோணவல பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சிகரட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது அவ்வீட்டிலிருந்து சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட மேலும் ஒரு தொகை சிகரெட்டுகளுடன் 48 வயதான நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக களனி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.