ஹரக் கட்டா – கெஹெல்பத்தர பத்மே மோதல் : ஆரம்பமான விசாரணைகள்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன எனப்படும் ‘ஹரக் கட்டா’ மற்றும் மந்தினு பத்மசிறி பெரேரா எனப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ ஆகியோருக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த மோதல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மோதலுக்கு முன்னர், இருவரும் ஒருவரையொருவர் சந்திக்கும் வகையில் சூழ்நிலை எவ்வாறு உருவானது என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதன்ன தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகள் திணைக்களம்
இதேவேளை, இந்த மோதல் தொடர்பில் காவல்துறை மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் ஆகிய இரு தரப்பினரும் தனித்தனியாக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (22) பிற்பகல் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த மோதலில் கெஹெல்பத்தர பத்மே சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில், வெலிசர கடற்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், சிகிச்சை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவர் வெலிசர சிறைச்சாலையில் தங்கவைக்கப்பட்டிருந்த சிறைப் பிரிவுக்கு மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |