காவத்தையில் பதற்றம் - காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையே மோதல்
இளைஞர்கள் இருவரைக் கடத்திச் சென்று காவத்தை - யாஹின்ன பிரதேசத்தில் அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞரொருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்த இளைஞனின் இறுதிச் சடங்கு இன்று (03..07.2025) மதியம் இடம்பெற்றது.
காவல்துறையினர் மீது தாக்குதல்
இறுதிச் சடங்கிற்குப் பிறகு காவல்துறையினருக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்த இளைஞனின் பகுதிக்கு பாதுகாப்புக்காக சுமார் 150 காவல்துறை அதிகாரிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இளைஞரின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதல்களை எதிர்கொண்டு, காவல்துறையினர் அப்பகுதியிலிருந்து விலகி, பின்னர் அப்பகுதி மக்களைக் கட்டுப்படுத்த படைகளை அனுப்பி கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.
கண்ணீர் புகை குண்டுத் தாக்குதல்களில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
