எரிவாயு வரிசையில் நின்ற குடும்பஸ்தருக்கு நிகழ்ந்த அனர்த்தம் - ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்
Sri Lanka
Litro Gas
Sri Lankan Peoples
By Sumithiran
குடும்பஸ்தரின் தலையில் விழுந்த தேங்காய்
பிடிகல பிரதேசத்தில் இன்று (21) எரிவாயு வரிசையில் நின்ற குடும்பஸ்தர் ஒருவரின் தலையில் தேங்காய் விழுந்து பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பிடிகல காவல்துறையினர் தெரிவித்தனர்.
பிடிகல இடிபாலகொட பிரதேசத்தில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஐந்து நாட்கள் வரிசையில்
பிடிகல இடிபலேகொட பாடசாலை மைதானத்தில் கடந்த ஐந்து நாட்களாக எரிவாயுவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் வரிசையில் நின்று கொண்டிருந்த குடும்பஸ்தரின் தலையில் இன்று இந்த தேங்காய் விழுந்துள்ளது.

தலையில் தேங்காய் விழுந்த நபரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக எல்பிட்டிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பிடிகல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி