தேங்காய் அறுவடையில் ஏற்பட்டுள்ள பெரும் வீழ்ச்சி
நாட்டில் வருடம்தோரும் மேற்கொள்ளப்படும் தேங்காய் அறுவடையின் அளவு எதிர்பார்த்ததை விடவும் இவ்வருடம் குறைந்துள்ளதாக தென்னை வேளாண்மை சபை தலைவர் சுனிமல் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
இவ்வருடம் தேங்காய் அறுவடை மூலம் 3,000 மில்லியன் தேங்காய்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதில் 246 மில்லியன் தேங்காய்கள் குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தென்னை இருவார விழா குறித்த ஊடக சந்திப்பில் பங்கேற்ற சுனிமல் ஜெயக்கொடி, எந்த காரணத்திற்காகவும் தென்னை மரங்களை வெட்டுவது சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எதிர்பார்க்கப்பட்ட தேங்காய் அறுவடை
நாட்டில் சுமார் 1.1 மில்லியன் ஏக்கர் பரப்பளவில் தேங்காய் அறுவடை மேற்கொள்ளப்படுகிற நிலையில், நாட்டின் தென்னை முக்கோணம் என்று அழைக்கப்படும் குருநாகல், புத்தளம் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தேங்காய் அறுவடை பரவலாக மேற்கொள்ளப்படுகிறது.
நாட்டில் ஆண்டுதோறும் எதிர்பார்க்கப்படும் தேங்காய் அறுவடை சுமார் 3,000 மில்லியன் தேங்காய்கள் ஆகும், ஆனால் காட்டு விலங்கு சேதம் மற்றும் பயிர் சேதம் உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக முந்தைய ஆண்டுகளில் எதிர்பார்க்கப்பட்ட தேங்காய் அறுவடை அடையப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
