கொழும்பு - காங்கேசன்துறை தொடருந்து சேவைகள் இன்று முதல் ஆரம்பம்!
கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான யாழ் தேவி தொடர்ந்து சேவை இன்று(மே 11) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த புதிய அட்டவணையின்படி, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கான தொடருந்து சேவைகள் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இடம்பெறவுள்ளன.
அத்தோடு, காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டைக்கான சேவைகள் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
பயணச்சீட்டு முன்பதிவு
இதேவேளை, பயணிகளின் வசதிக்காக இந்த தொடருந்தில் நான்கு குளிரூட்டப்பட்ட முதல் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதன்படி, இதற்கான பயணச்சீட்டுகளை தொடருந்து திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் ஊடாகவோ அல்லது இருக்கை முன்பதிவு வசதி கொண்ட தொடருந்து நிலையங்களுக்குச் சென்றோ பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |