வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பாதாள குழு உறுப்பினரின் உதவியாளர் தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
பாதாளக் குழு உறுப்பினரான கெசெல்வத்த தினுகவின் சகாவின் உதவியாளர் ஒருவர் கஞ்சா மற்றும் 50 இலட்சம் ரூபா பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு கிடைத்த தகவலின்படி நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது கவிஷ்க மதுஷான் எனப்படும் வனாத்தே சது என்பவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொட்டிகாவத்த பிரதேசத்தில் வாடகை வீடொன்றில் மறைந்திருந்த போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த சந்தேக நபர் கெசெல்வத்த தினுக்கவின் பிரதான உதவியாளர் என்பதுடன், டுபாயில் தலைமறைவாகியுள்ள ஜூட் பெட்ஸ் என்பவரின் உதவியாளர் எனவும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரிடமிருந்து சுமார் 55 இலட்சம் பணமும், 4 கிலோ 600 கிராம் கேரள கஞ்சாவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.