உலகளாவிய ரீதியில் கொழும்பு துறைமுகம் 13 ஆவது நிலைக்கு தரமுயர்த்தப்படும் : ரோஹித அபேகுணவர்தன
Srilanka
Globally
Rohitha Abeygunawardena
Colombo Port
Popular ports
By MKkamshan
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே துறைமுகம் மற்றும் கப்பற்துறை அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன (Rohitha Abeygunawardena) இதனை தெரிவித்தார்.
அரசதலைவர், பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் குறித்த திட்டம் 2024 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் திகதி முழுமையடையும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
உலகளாவிய ரீதியில் பிரபல்யமான துறைமுகங்களின் தரவரிசை பட்டியில் இலங்கை 23 ஆவது இடத்தில் உள்ளது. 2034ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு துறைமுகம் 13 ஆவது நிலைக்கு தரமுயர்த்தப்படும் எனவும் தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி