கொழும்பு துறைமுகம் தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு -இந்தியாவின் நிலை என்ன?
srilanka
colombo
rohitha abeygunawardana
By Vasanth
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நடவடிக்கையை 100 வீதம் இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் வரும் அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. துறைமுக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அமைச்சரவைப்பத்திரத்தை ரோஹித்த அபேகுணவர்தன சமர்ப்பித்திருந்தார்.
இதேவேளை கிழக்கு முனையம் தொடர்பில் இந்தியாவுடன் பேச்சு நடத்த குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டு மே மாதம் இந்தியா, இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையில் முத்தரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி