கொழும்பில் திடீரென உடைக்கப்படும் வர்த்தக நிலையங்கள்- வர்த்தகர்கள் ஒன்று திரண்டமையால் அமைதியின்மை
srilanka
colombo
By Vasanth
கொழும்பில் திடீரென வர்த்தக நிலையங்கள் உடைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெக்கோ இயந்திரத்தின் உதவியுடன் வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு வருவதாகவும், வர்த்தக நிலையங்கள் உடைக்கப்படுவதற்கு வர்த்தகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக தற்போது குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கொழும்பு செட்டியார் தெரு கபொஸ் ஒழுங்கையிலுள்ள வர்த்தக நிலையங்கள், திடீரென உடைக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பகுதியிலுள்ள சில கட்டடங்கள் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டவை எனக் கூறியே, உடைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி