கொழும்பு பங்குச் சந்தை வரலாற்று சாதனை
colombo
sri lanka
people
By Shalini
கொழும்பு பங்குச் சந்தையில் அனைத்து பங்கு விலைச்சுட்டெண்களும் இன்று வரலாற்றில் முதல்முறையாக 9,000ஐ கடந்து அதன் உயர்ந்த மதிப்பைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.
இன்றைய நாளின் (01) கொடுக்கல் வாங்கலின் நிறைவில் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 9,163.13 ஆக பதிவாகியிருந்ததாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.
முன்னதாக 2021 ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி அனைத்து பங்கு விலைச்சுட்டெண் உயர்ந்த மதிப்பை பதிவு செய்திருந்த போது, 8,920.71 ஆக பதிவாகி இருந்தது.
இன்றையதினம் பரிமாறப்பட்ட பங்குகளின் மொத்த புரள்வு 14.56 பில்லியன் ரூபாவாக பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.