பில்லியன் கணக்கில் EPF செலுத்தாத நிறுவனங்கள் : வெளியான தகவல்
நாட்டிலுள்ள 22,450 இற்கும் அதிகமான நிறுவனங்கள் ஊழியர் சேமலாப நிதியத்திற்கான பணத்தை வைப்புச் செய்யவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பில் (Colombo) நேற்று (24) இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து பிரதிதொழிலமைச்சர் மகிந்த ஜயசிங்க (Mahinda Jayasinghe) குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ''நாடளாவிய ரீதியில் 22,450 இற்கும் மேற்பட்ட அரச, அரச அனுசரணையில் இயங்கும் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஊழியர் சேமலாப நிதியத்திற்கான நிதியைச் செலுத்தவில்லை.
டிஜிட்டல் மயப்படுத்தல்
இந்தநிலையில் தற்போது 36 பில்லியன் ரூபா ஊழியர் சேமலாப நிதியத்திற்குச் செலுத்தவேண்டியுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். டிஜிட்டல் அமைச்சுடன் ஒருங்கிணைந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த வேலைத்திட்டங்கள் ஊடாக பெரும்பாலான விடயங்களை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம். இதனடிப்படையில் தற்போது நிலவும் பல்வேறு பிரச்சினைகள், குறைபாடுகள் நிவர்த்திக்கப்படும்'' என பிரதிதொழிலமைச்சர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்
