யாழ். பல்கலை ஒழுக்காற்று உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஆணைக்குழுவில் முறைப்பாடு

Jaffna University of Jaffna Sri Lankan Peoples
By Dhilak Apr 27, 2025 01:36 PM GMT
Report

யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவ ஒழுக்காற்று உத்தியோகத்தர்களுக்கு எதிராக மாணவர்கள் மூவர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு அளித்துள்ளனர்.

யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகளின் போது குறித்த உத்தியோகத்தர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒழுக்காற்று விதிகளை மீறி, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கமைவாக நடந்து கொள்வதாக முறைப்பாட்டில் அவர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்தோடு, இந்த விதி மீறல்கள் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்வதாகவும் மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

யாழ். மாநகர சபை சுகாதார பிரிவினரின் அதிரடி முடிவு: மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

யாழ். மாநகர சபை சுகாதார பிரிவினரின் அதிரடி முடிவு: மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

சட்டத்துக்கு முரணான செயற்பாடு

கடந்த மாதம் 29 ஆம் திகதி பல்கலைக்கழக விடுதி ஒன்றுக்குள் நான்காம் வருட மாணவர் ஒருவர் குடிபோதையில் வந்து அறையொன்றில் அனுமதி பெறாமல் தங்கியிருந்த சம்பவம் தொடர்பில் முதலாமாண்டு மாணவர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ். பல்கலை ஒழுக்காற்று உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஆணைக்குழுவில் முறைப்பாடு | Complaint Against Jaffna Uni Disciplinary Officers

அம்முறைப்பாட்டுக்கமைய நடவடிக்கைகளை எடுக்காமல், முறைப்பாடு செய்த மாணவர்கள் உட்பட விடுதியில் தங்கியிருந்த முதலாமாண்டு மாணவர்களை அச்சுறுத்தும் வகையில், மாணவர்களை விடுதிகளிலிருந்து வெளியே செல்லும் நேரம் முடிவடைந்த பின்னர் இரவு வேளையில் வீதி வழியாக வேறொரு வீடுதிக்கு அழைத்துச் சென்று, அறை ஒன்றில் வைத்துப் பூட்டிய பின்னர் அங்கு வலுக்கட்டாயமாகப் பொய் வாக்குமூலங்களில் கையொப்பம் இடுமாறு பணிக்கப்பட்டதாகவும், மாணவர்களின் சம்மதமின்றி காணொளி வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாகவுமே மூன்று மாணவர்களும் தமது முறைப்பாடுகளில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்று நிருபத்துக்கமைவாகத் துணைவேந்தரால் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளாமல், சட்டத்துக்கு மாறாக மாணவ ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள் விசாரணைகளை மேற்கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, மாணவர்களை விசாரணைக்கு அழைப்பது முதல் விசாரணை நடைமுறைகள் உட்பட சட்டத்துக்கு முரணாகச் செய்யப்படும் விசாரணைகள் பற்றி பல்கலைக்கழக நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும், திரும்பத் திரும்ப முறைப்பாடு செய்யும் மாணவர்களுக்கெதிராகவே விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சை - வெளியானது சிறப்பு சித்தி பெற்ற மொத்த மாணவர்களின் விபரம்

உயர்தரப் பரீட்சை - வெளியானது சிறப்பு சித்தி பெற்ற மொத்த மாணவர்களின் விபரம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!            


ReeCha
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025