தொழில் கல்வியை முழுமையாக மறுசீரமைக்க நடவடிக்கை: ரணில் உறுதி
வளர்ந்த நாடுகளின் கல்வி முறைமைகளை கருத்திற்கொண்டு இந்த நாட்டில் தொழில் கல்வியை முழுமையாக மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஹங்வெல்ல ராஜசிங்க கல்லூரியில் இன்று (25) நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட போதே அதிபர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து அதிபர் குறித்த பாடசாலை மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
முக்கியமான விடயம்
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அதிபர், “இந்தக் கல்வி முறையில் திருப்தி அடைய முடியாது, உயர்தர மற்றும் சாதாரண தர மாணவர்களைக் கருத்தில் கொண்டால், அவர்கள் பாடசாலையில் இருந்தும் கூடுதல் வகுப்புகளிலிருந்தும் கற்றுக்கொள்கிறார்கள்.

அரசும் வீடும் இரண்டு வழிகளில் பணத்தைச் செலவழிக்கின்றன, சில சமயங்களில் உயர்தர மாணவர்கள் பாடசாலைக்கு கூட வருவதில்லை, இது பாரிய பிரச்சினை ஆகும், ஆகையால் தொழிற்கல்வியை சீரமைப்பது முக்கியமான விடயம் ஆகும்” என்றார்.
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 18 மணி நேரம் முன்