கோட்டாபயவை கொல்ல சதித்திட்டம் தீட்டிய கும்பல்: முன்னாள் செயலாளர் பகீர் தகவல்
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியை கவிழ்க்க அன்றைய அதிபரின் செயலாளர் பி.பி.ஜயசுந்தரவே பிரதான சதிகாரர் என முன்னாள் அதிபரின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.
ஜெனரல் எகொடவெல கோட்டாபய ராஜபக்சவை யாரையும் சந்திக்க அனுமதிக்காமல் சிறையில் அடைத்ததாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடகமாடிய இருவர்
பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவும் முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவும் நாடமாடியாதாக அவர் கூறுகிறார்.
இணைய ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கோட்டாபயவை கொல்ல ஆயத்தங்கள்
கோட்டாபயவிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் ஒருபகுதியாக 150 முதல் 180 பேர் கொண்ட குழுவொன்று மிரிஹானவில் உள்ள கோட்டாபய ராஜபக்சவின் வீட்டை சுற்றி வளைத்ததாகவும் மேலும் கோட்டாபய ராஜபக்சவை கொல்ல ஆயத்தங்கள் நடந்ததாகவும், அதற்காகவே முஸ்லிம்கள் அங்கு இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |