நடுவீதியில் கவிழ்ந்த கொள்கலன் வாகனம் : போக்குவரத்திற்கு ஏற்பட்ட சிக்கல்
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
By Sathangani
ஹொரணை - கொழும்பு வீதியில் கொள்கலன் வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோனபொல சந்திக்கு அருகில் இன்று (29) அதிகாலை 1.00 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இந்த விபத்தினால் வீதியின் ஒரு வழிப்பாதை வீதிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக மொரகஹஹேன காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்திற்கான காரணம்
ஹொரணை கைத்தொழில் வலயத்திலிருந்து கொழும்பு துறைமுகத்தை நோக்கிப் பயணித்த கொள்கலன் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொள்கலன் வாகனம் அதிக வேகத்தில் வந்து வளைவைக் கடக்க முயன்றமையே விபத்திற்குக் காரணம் என காவல்துறையினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்