ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ள புறப்பட்ட ஸ்பெயின் அதிபருக்கு கொரோனா
COVID-19
Spain
India
By Sumithiran
இந்தியாவில் இன்றையதினம் ஆரம்பமாகிய ஜி20 மாநாட்டிற்கு புறப்பட்ட ஸ்பெயின் அதிபருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவரது பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்திய தலைநகர் புதுடில்லியில் ஆரம்பமாகியுள்ள ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஸ்பெயின் நாட்டின் அதிபர் பெட்ரோ சான்செஸ் இந்தியாவிற்கு புறப்பட இருந்தார்.
கொரோனா தொற்று

ஆனால் கடைசி நேரத்தில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது மருத்துவ சோதனையில் தெரியவந்துள்ளது.
இதனால் டில்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் அவர் கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவருக்கு பதிலாக துணை அதிபர் நடியோ கெல்வினோ, பொருளாதார அமைச்சர், வெளியுறவு துறை அமைச்சர் ஆகியோர் ஸ்பெயின் நாட்டின் பிரதிநிதிகளாக ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என ஸ்பெயின் அதிபர் தெரிவித்துள்ளார்.