தேவையின்றி வெளியே வரவேண்டாம்! பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்
srilanka
covid19
corona
colombo
peoples
By S P Thas
தவிர்க்க முடியாத தேவைகளுக்காக அன்றி, பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியேற வேண்டாம் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
வெசாக் பண்டிகை முடியும் வரை பொதுமக்கள் பயணக் கட்டுப்பாடுகளைப் பேண வேண்டும் என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஷெனால் பெர்னாண்டோ இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். பொதுமக்களின் ஆதரவு கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்புகளைத் தவிர்த்துக்கொள்ள உதவியாக அமையும் என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த மூன்று நாட்களில் பொதுமக்கள் வீட்டிலிருந்து ஒத்துழைத்ததைப் போன்று, அடுத்த 10 நாட்களும் பயணங்களைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் வைத்தியர்
ஷெனால் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்
மைத்திரியின் உத்தரவால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் இருவர் மட்டுமே கைது! ஹேமசிறியின் பரபரப்பு வாக்குமூலம்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்