கொரோனா மருத்துவமனையிலிருந்து வந்த நல்ல செய்தி
கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் நிலையமான ஐ.டி.எச் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாக அதன் இயக்குநர் டாக்டர் ஹசித அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் இலங்கையின் முன்னணி மருத்துவமனையாக ஐ.டி.எச் உள்ளது.
கொரோனா நோய்த்தொற்றுடன் 200க்கும் மேற்பட்டோர் ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது கண்டறியப்பட்டுள்ளது. எனினும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 100ஆகக் குறைந்துவிட்டதாக மருத்துவமனை இயக்குநர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் ஒரு கட்டத்தில் மருத்துவமனையின் அனைத்து அறைகளும் முழுமையாக நிரப்பப்பட்டதாகவும் தெரிவித்தார்.
நோயாளிகளின் எண்ணிக்கை குறைவதற்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி முக்கிய காரணமாக அமைந்துள்ளது,
மேலும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டாலும் எந்தவொரு ஆபத்தான நேரத்திலும் சேவை வழங்க மருத்துவமனை தயாராக இருப்பதாக மருத்துவமனை அதிகாரிகள் கூறுகின்றனர்.