அனைவருக்கும் தடுப்பூசி வழங்கி முடித்த முதலாவது நாடாக இலங்கையை மாற்ற முயற்சி
கொவிட் -19 தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கு அரச துறை போன்றே தனியார் துறை சுகாதார பிரிவினர் மற்றும் பொதுமக்கள் ஆர்வமாக உள்ளனர். பெப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியளவில் சாதாரண மக்களுக்கும் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள கூடியதாகவிருக்கும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே நம்பிக்கை வெளியிட்டார்.
கிராமத்துடன் கலந்துரையாடல் - வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு செயல்திட்டம் மற்றும் 2021 வரவு செலவுத் திட்டம் யதார்த்தமாகும் தேசிய ஒருங்கிணைப்பு துணை குழு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று அலரி மாளிகையில் நிறுவப்பட்டது. இதனபோதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கொவிட்-19 தடுப்பூசியை வழங்குவதை தீவிரப்படுத்தி அனைவருக்கும் தடுப்பூசி வழங்கி முடித்த முதலாவது நாடாக இலங்கையை அடையாளப்படுத்தும் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டியுள்ளதாக இதன்போது பசில் ராஜபக்ஷ வலியுறுத்தினார்.