இலங்கையில் இன்றும் 11 பேரை பலியெடுத்தது கொரோனா
srilanka
corona
death
By Sumithiran
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 11 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 745 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1895 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 810 பேர் இன்று (06) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 100,885 ஆக அதிகரித்துள்ளது
1ம் ஆண்டு நினைவஞ்சலி