திடீர் மின்தடைக்கு காரணம் சதியா ? இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்
srilanka
collapse
darkness
Duminda Dissanayake
By Jaso
இன்றையதினம் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்தடைக்கு தொழிற்சங்க நடவடிக்கையா அல்லது திடீர் மின்தடை காரணமாக மின்வெட்டு ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என சூரிய, காற்று மற்றும் நீர் உற்பத்தி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க(Duminda Dissanayake) தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற மின்வெட்டு தொடர்பிலான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.
தொழிற்சங்க நடவடிக்கையினால் மின்வெட்டு ஏற்பட்டால் அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என அவர் தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்