காவல்துறை உத்தியோகத்தர்கள் மீது வாள்வெட்டு : இளம் தம்பதி கைது
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
By Sumithiran
போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை தொடர்பான இரகசிய தகவலைத் தொடர்ந்து, மாரபொலவில் உள்ள ஒரு வீட்டை சோதனையிட சென்ற வெயாங்கொடை காவல்துறை அதிகாரிகள் இருவரை வாளால் தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற தம்பதியினர் நேற்று (18) கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், தம்பதியினர் வீட்டிற்குள் சிறிய பொதிகளில் போதைப்பொருட்களை அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இளம் தம்பதி கைது
பொட்டலம் கட்டப்பட்டிருந்த 12,400 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் ஒரு சிறிய மின்சார தராசையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்..
கைது செய்யப்பட்ட பெண் 18 வயதுடையவர் என்பதுடன், அவர் அந்த வீட்டில் வசிப்பவர் ஆவார். மற்றய சந்தேக நபர் மினுவங்கொடை, கட்டுவெல்லேகம பகுதியைச் சேர்ந்தவர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்