அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக மேல் முறையீட்டு நிதிமன்றில் வழக்குத் தாக்கல்!
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முழங்காவில் அன்புபுரம் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கமும், பிறிதொரு அமைப்பின் பிரதிநிதிகளும் இணைந்து இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.
பிரதான பிரதிவாதியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிடப்பட்டு மேன் முறையீட்டு நீதிமன்றில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்குத் தாக்கல்

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி தொடர்பில் இலங்கை கடற்றொழில் அமைச்சு போதுமான நடவடிக்கை எடுக்க தவறியுள்ளதாக குறிப்பிட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட சட்டத்தைப் பயன்படுத்தி குறித்த சட்டவிரோத மீன்பிடியை கட்டுப்படுத்துவதற்கான எழுத்தாணையை வழங்குமாறு மேல் முறையீட்டு நிதிமன்றிடம் குறித்த வழக்கின் மூலம் கோரப்பட்டுள்ளது.
வழக்கின் பிரதிவாதிகள்

இதேவேளை, குறித்த வழக்கில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கா, கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுர எக்கநாயக்க ஆகியோரின் பெயர்களும் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.