அர்ச்சுனாவுக்கு நீதிமன்ற கடிவாளம்! அவசர வேகத்தில் மறைந்த காணொளிகள்
கனம் கோட்டார் அவர்களே எனது கட்சிக்காரரான அர்ச்சுனா ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால் அவருக்கு பேச்சுச் சுதந்திரம் உள்ளது என அர்ச்சுனாவில் தங்கம் விளிப்பு சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரன் கடுமையா வாதிட்டாலும் இந்தக்கதையெல்லாம் இங்கு எடுபடாது என்ற செய்தியை யாழ் நீதிமன்றம் நெத்தியடியாக சொல்லியுள்ளது.
அர்ச்சுனாவின் கோல்டன் லோயர் அதாவது தங்க சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரனின் இந்த வாதத்தையும் நிலைப்பாட்டை கடுமையாக நிராகரித்த நீதிபதி ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி, சாதாரண குடிமகனாக இருந்தாலும் சரி, அவரது பேச்சுச்சுதந்திரத்துக்கு வரையறுக்கப்பட்ட ஒரு எல்லை உண்டு எனச் சுட்டிக்காட்டி நேற்று ஒரு தீர்ப்பை வழங்கினார். இந்த தீர்ப்பு முக்கியமான நேரத்தில் தான் வந்துள்ளது.
தெல்லிப்பழை புற்றுநோய் சிகிச்சைப் பிரிவின் முன்னணி புற்றுநோய் மருத்துவ நிபுணரான கிரிஷாந்தி ராஜசூரியர் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தனது யூ ரியுப் சமூக ஊடகம் ஊடாக வெளிப்படுத்திய பாரதூரங்கள் மற்றும் வக்கிரத்தனமான அவதூறுகள் குறித்து தொடுக்கபட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வந்ததை அடுத்து இவை தொடர்பான அனைத்து அவதூறான காணொளிகளையும் உடனடியாகவே எம்.பி நீக்கியுள்ளார்.
செருப்புமாலை அணிவிக்கப்பட்ட தனது பாதாதையை தானே அகற்றிய கையுடன் நேற்று இந்த வீடியோக்களையும் அவர் அகற்றிருக்கிறார்.
சமுக ஊடகங்களில் அல்லது குரலற்ற சாமானியர்கள் முன்னால் இல்லையென்றால் பிரதேசபை அரங்குகளில் எதனையும் சொல்லாம் என்ற விடயத்துக்கு இந்த தீர்ப்பு ஒரு முக்கிய செய்தியை சொல்லியுள்ள நிலையில் இந்த விடயத்தை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |