லக்ஷ்மன் யாப்பாவுக்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Lakshman Yapa Abeywardena Sri Lanka Government Law and Order
By Sathangani Aug 20, 2025 07:24 AM GMT
Report

அரசாங்கத்திற்கு 17 இலட்சம் ரூபாவுக்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன (Lakshman Yapa Abeywardena) மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க (Jayantha Edirisinghe) ஆகியோருக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கை எதிர்வரும் செப்டம்பர் 7ஆம் திகதி ஆரம்ப கட்ட விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன முன்னிலையில் அழைக்கப்பட்டது.

தேசபந்துவின் முன்பிணை கோரிக்கை - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தேசபந்துவின் முன்பிணை கோரிக்கை - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழு

இதன்போது, இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, நீதிமன்றில் தமது சமர்ப்பணங்களை முன்வைத்ததுடன், குற்றப்பத்திரிகையில் பல திருத்தங்களைச் சேர்க்கவும் அனுமதி கோரினார். அதற்கு நீதிமன்றமும் அனுமதி வழங்கியிருந்தது.

லக்ஷ்மன் யாப்பாவுக்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Court Order In The Case Against Lakshman Yapa

அதன் பின்னர், இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி குற்றப்பத்திரிகை தொடர்பான ஆவணங்கள் அடங்கிய ஒரு இறுவெட்டை பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகளுக்கு வழங்கினார்.

அந்த சந்தர்ப்பத்தில் பிரதிவாதிகள் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி குறித்த ஆவணங்கள் அச்சிடப்பட்ட பிரதிகளில் வழங்கப்பட்டால் அது மிகவும் முக்கியமானதாக இருக்கும் என தெரிவித்தார்.

சுமந்திரனின் கடையடைப்பால் உறுதியான அநுர அரசாங்கத்தின் பலம்

சுமந்திரனின் கடையடைப்பால் உறுதியான அநுர அரசாங்கத்தின் பலம்

முதற்கட்ட விசாரணை

இந்த வழக்கு தொடர்பாக ஏராளமான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால், அவை ஒரு இறுவெட்டின் ஊடாக வழங்கப்பட்டதாக மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி குறிப்பிட்டார்.

லக்ஷ்மன் யாப்பாவுக்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Court Order In The Case Against Lakshman Yapa

இதனை அவதானித்த நீதிபதி பிரதிவாதிகள் ஏதேனும் ஆவணங்களை பிரதிகளாக கோரினால் அதனை வழங்குமாறு மனுதாரர் தரப்பினருக்கு அறிவுறுத்தினார்.

அத்துடன் முதற்கட்ட விசாரணை ஆரம்பத்தின் போது பிரதிவாதிகள் தமது ஆட்சேபனை முன்வைக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

இந்நிலையில் வழக்கின் ஆரம்ப கட்ட விசாரணைகளை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி எடுத்துக்கொள்வதாக நீதிபதி அறிவித்தார்.

நல்லூர் கந்தனின் 23ஆம் நாள் காலை உற்சவம்

நல்லூர் கந்தனின் 23ஆம் நாள் காலை உற்சவம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022