இந்திய கடற்றொழிலாளர்களுக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு
இந்திய கடற்றொழிலாளர்கள் 29 பேரில் 26 பேருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் மூவருக்கு 6 மாத கட்டாய சிறைத்தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த செப்டெம்பர் மாதம் 28 மற்றும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதிகளில் இரு படகுகளுடன் நெடுந்தீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 29 இந்திய கடற்றொழிலாளர்களின் வழக்கு இன்று (10) ஊர்காவற்றுறை நீதிமன்றில் இடம்பெற்றது.
இதன்போது சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் குறித்த கடற்றொழிலாளர்கள் நீதிமன்றிற்கு அழைத்துவரப்பட்டனர்.
ஊர்காவற்றுறை நீதிமன்றம்
வழக்கினை ஆராய்ந்த நீதவான் நளினி சுபாஸ்கரன் 26 கடற்றொழிலாளர்களுக்கு 6 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட 2 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

அத்துடன் இரு படகுகளின் ஓட்டிகளுக்கும் ஒரு படகு உரிமையாளருக்கும் 6 மாத கட்டாய சிறைத்தண்டனையும் தலா 4 மில்லியன் அபராத தொகையும் செலுத்துமாறும் அதனை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 3 மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவிக்கவேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்கள் த.பிரதீபன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |