உயர்தர பரீட்சை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
2026 உயர்தரப் பரீட்சையை பிற்போடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு பரிசீலனையின்றி நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ரோகந்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்களுக்குப் பிற்போடுமாறு உத்தரவொன்றைப் பிறப்பிக்க கோரி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மனு தாக்கல்
குறித்த மனு தொடர்பில் விரிவாக முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னரே மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (23) இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளது.

இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினாலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
2026 ஆம் ஆண்டுக்கான உயர் தரப் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிட்த்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 20 மணி நேரம் முன்