கொவிட் நிதியத்தில் நடப்பது என்ன? அரசை சாடிய திஸ்ஸ அத்தநாயக்க
இடுகம' எனப்படும் 'செய் கடமை' கொவிட் நிதியத்திற்கு கிடைத்த மில்லியன் கணக்கான ரூபாய் பணம் செலவிடப்பட்ட விதம் குறித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது.
கொவிட் நிதியத்தில் பெருந்தொகையான சுமார் 65 மில்லியன் ரூபாய் நிதி பிரசாரங்களுக்காக செலவிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது.
இடுகம கொவிட் நிதியத்திற்கு கிடைத்த கோடிக்கணக்கான ரூபாய் பணத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களுக்கு மாத்திரம் சுமார் 67 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும் அவர்களின் நல்வாழ்விற்கும் பொது மக்களால் நன்கொடை அளிக்கப்பட்ட நிதியை அரசாங்கம் தேவையற்ற விதத்தில் செலவிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பின் திஸ்ஸ அத்தநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்