கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வரவே முடியாது! மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
sri lanka
people
hemantha herath
By Shalini
கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவதற்கு பல தசாப்தங்கள் கூட செல்லலாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் (Hemantha Herath) தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்குவதன் ஊடாக வைரஸ் பரவல் வேகமாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரித்துள்ளார்.
சாதாரணமான நிலைக்கு மீண்டும் திரும்ப முடியும் என்பதை எதிர்ப்பார்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று ஏற்படுவதற்கு முன்னால் இருந்த பழைய நிலைக்கு மீண்டும் செல்லக்கூடியதற்கான வாய்ப்பு எந்த விதத்திலும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவதற்கு பல தசாப்தங்கள் கூட செல்லலாம் என அவர் தெரிவித்துள்ளார்.