யாழில் இடம்பெற்ற அரிய நிகழ்வு : தீயாய் பரவும் புகைப்படங்கள்
Jaffna
Sri Lanka
By Shalini Balachandran
யாழில் பசு ஒன்று மூன்று கன்றுகளை ஈன்ற அரிய நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு வடமராட்சி, உடுப்பிட்டி இலக்கணாவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் விவசாயி ஒருவர் விலங்கு வேளாண்மையில் ஈடுபட்டு வருகின்றார்.
அரிய நிகழ்வு
இவ் விவசாயியின் பசு மாடு நேற்று முன் தினம் (07) மூன்று கன்றுகளை ஈன்றுள்ளது.
இரண்டு நாம்பன் ஒரு பசுக் கன்று ஈன்றுள்ளதானது இலங்கையிலேயே முதலாவதாக இருக்கலாம் என விவசாயி மகழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், மூன்று கன்றுக் குட்டிகளும் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



