உலக சந்தையை அதிரவைத்த ரஷ்யாவின் முடிவு - சடுதியாக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை
ரஷ்யா தனது எண்ணெய் உற்பத்தியை குறைக்கப்போவதாக சூசகமாக தெரிவித்ததை அடுத்து உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இதன்படி, கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை ஒரே நாளில் 2.94 டொலர்கள் (3.63%) அதிகரித்துள்ளது.
குறித்த எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.72 டொலர்களாக தற்போது பதிவாகியுள்ளது.
எண்ணெயின் விலை
அமெரிக்க டபிள்யூ.டி.ஐ. எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் 2.07 (2.67%)டொலரால் அதிகரித்ததை அடுத்து தற்போது ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை 79.56 டொலர்களாக பதிவாகியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு விடையளிக்கும் வகையில், மேற்கத்திய நாடுகளின் G-7 குழு ரஷ்ய கச்சா எண்ணெய் மீது 60 டொலர் அதிகரித்து உச்சவரம்பை விதித்தது.
மற்றும் அதற்கு பதிலடியாக ரஷ்யா தனது தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை 500,000 முதல் 700,000 பீப்பாய்கள் வரை குறைக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியது.
மேற்கத்திய நாடுகள்
இது குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அடுத்த வாரம் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகாரப்பூர்வமாக வெளியிடலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்தான ஆவணத்திலும் கையெழுத்தாகலாம் என தெரிகிறது.
ரஷ்யாவினை எப்படியேனும் முடக்கிவிட வேண்டும் என கூறிவரும் மேற்கத்திய நாடுகள் மத்தியில், இது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு கட்டத்தில் ரஷ்ய எண்ணெயை யாரும் வாங்க கூடாது என்று கூறப்பட்ட நிலையில், மறுபுறம் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் சலுகை விலையில் எண்ணெய் வாங்கின. இதற்கிடையில் ரஷ்யா எப்போதும் போல இல்லாவிட்டாலும் ஒரளவுக்கு விற்பனையை செய்து வந்தது.
ரஷ்யாவின் இந்த முடிவு
ஜி7 நாடுகளின் விலை உச்ச வரம்பால் பாதிக்கப்படுவதற்கு, அதற்கு உற்பத்தியினை குறைத்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு ரஷ்யா வந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் ரஷ்யா இப்படி ஒரு முடிவினை எடுக்கும் என மேற்கத்திய நாடுகள் எதிர்பார்த்திருக்காத நிலையில் ரஷ்யாவின் இந்த முடிவால் மேற்கத்திய நாடுகள் மட்டும் அல்லாது, சர்வதேச நாடுகள் அனைத்துமே பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யா உக்ரைன் பிரச்சனைக்கு இடையே எப்படியேனும், இப்பிரச்சனையை நிறுத்த வேண்டும் என்று கூறி வரும் நிலையில், இன்று வரையிலும் ரஷ்யா சில நாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது.
பதில் கொடுக்கும் ரஷ்யா
இதன் காரணமாக ரஷ்யாவின் பொருளாதாரமும் ஒரளவுக்கு வளர்ச்சி கொண்டு தான் உள்ளது.
ரஷ்யாவினை தங்கள் தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அதேசமயம் வளர்ச்சி காண விடக்கூடாது என்பதிலும் மேற்கத்திய நாடுகள் தெளிவாக இருந்து வருகின்றன. ஆனால் அவற்றிற்கெல்லாம் பதில் கொடுக்கும் விதமாக ரஷ்யா இப்படி ஒரு முடிவினை எடுத்திருப்பது எண்ணைய் விலையில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
