இலங்கை முழுவதும் பிறப்பிக்கப்பட்டது ஊரடங்கு! - சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு
மூன்றாம் இணைப்பு
கொழும்பில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை தொடர்ந்து நாடுமுழுவதும் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
முன்னதாக கொழும்பு தெற்கு, வடக்கு மற்றும் மத்திய பொலிஸ் பிரிவுகளுக்கு மறு அறிவித்தல் வரை உடனடியாக நடைமுறைப்படும் வகையில் காவல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மேல் மாகாணம் முழுவதும் இந்த ஊரடங்குச் சட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
கொழும்பில் தீரமடைந்த போராட்டத்தால் உடன் நடைமுறைப்படும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கொழும்பு வடக்கு, கொழும்பு மத்தி மற்றும் கொழும்பு தெற்கு ஆகிய காவல்துறை பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இவ்வாறு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோட்டகோகம மற்றும் மைனாகோகம எதிர்ப்புத் தளங்களில் அரசாங்க சார்பு ஆதரவாளர்களுக்கும் அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டது.
இந்தநிலையில், போராட்டக்காரர்களின் பகுதிக்குச் சென்ற மகிந்த ஆதரவாளர்கள் அங்கிருந்தவர்களை தாக்க முயற்சித்தனர்.
இதன்போது 17 பேர் காயமடைந்தனர்.
இதற்கிடையில், கலவரம் ஏற்பட்ட காலி முகத்திடலுக்கு சென்ற எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அங்கிருந்த எதிர்ப்பாளர்களால் விரட்டியடிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இதேவேளை, கொழும்பு காலிமுகத்திடலில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து இவ்வாறு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.






ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
