மனிதர்களின் உயிரை பறிக்கும் லோடியா மீனினம் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Fisherman
By Beulah
தற்போது லோடியா எனும் ஆபத்துக்குரிய மீனினம் இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் இருந்து தெற்கு கடற்பரப்பில் பரவியுள்ளதாக தேசிய விஷகட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
இம்மீனினம் மனித உடலில் படும்போது உயிரிழப்புக்களை ஏற்படுத்தலாம் என விஷ கட்டுப்பாட்டு மையத்தின் பிரதம நிபுணர் வைத்தியர் ரவி ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவ்வகை மீனினங்களை ஜூலை முதல் செப்டம்பர் வரை கடலில் காணலாம்.
எச்சரிக்கை

இதுகுறித்து வைத்தியர்கள்,
“இந்த மீன் ஒரு சிறிய பலூனைப் போலவும், வயிற்றில் நீளமான நுாலை போன்ற சுரப்பிகளைக் கொண்டிருக்கும்.
மேலும், இந்த மீனை தொடுவதனால், ஒரு நபர் ஒவ்வாமையிலிருந்து உயிரச்சுறுத்தல் நிலைக்குச் செல்லலாம்.
இதன் மூலம் நரம்பு மண்டலம், இதயம் மற்றும் சுவாச மண்டலம் பாதிக்கப்படலாம்” என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி